#BREAKING: மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..?

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

கர்நாடக மாநில தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும்,மின்  உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் வந்து அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல்  உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அச்சகத்தின் ஒப்புதல் இல்லாமலும், வன பாதுகாப்பு சட்டம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தராமல் அணைக்கட்டு கூடிய மேகதாதுவில் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவிப்பதாக  செய்திகள் வெளியானது.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது. பின்னர், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.

author avatar
murugan