யாஷ் புயல் : ஒடிசாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4  மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான யாஸ், கடந்த ஆறு மணி நேரத்திற்கும் மேலாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது அதி தீவிரப் புயலாக மாறி பாரதீப்பிற்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கீ.மீவேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில், யாஸ் புயல் காரணமாக இன்று மற்றும் நாளை ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய 4  மாவட்டங்களுக்கு அரசு ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், கட்டாக், கோர்டா மற்றும் பூரி ஆகிய இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசூர் மீது நாளைக்கு 150-160 கிமீ வேகத்தில் 180 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் சூறாவளி புயல் ஒரு ‘மிகக் கடுமையான சூறாவளி புயலாக’ தீவிரமடையப் போகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.