துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் …!எந்தவித ஊழலும் என்னுடைய  நியமனத்தில் நடைபெறவில்லை..!சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி

என்னுடடைய நியமனம் தகுதிகளின் அடிப்படையிலே  நடைபெற்றது என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.
Image result for ஆளுநர்
 
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில்  தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும்  நான்  தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் கருத்துக்கு  தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்  கூறுகையில் , துணைவேந்தர் நியமனத்துக்கு , உயர்கல்வித்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.தொடர்ந்து அவர் கூறும் போது , தெரிவுக்குழு அமைப்புடன் அரசின் பணி முடிந்து விடுகிறது.உயர்கல்வித்துறைக்கும் , துணைவேந்தர் நியமனத்துக்கு எந்த சம்மந்தமும் கிடையாது.தகுதியில் அடிப்படையே துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்.ஆளுநர் கூறியது வியப்பளிக்கிறது , எதை மனதில்வைத்து இந்த கருத்தை ஆளுநர் கூறினார் என்று அவரிடம் தன் கேட்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் தெரிவித்தார்.
Image result for Dr.P.Duraisamy,Ph.D.,D.Econ.Sc
இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி ஊழல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என்னுடடைய நியமனம் தகுதிகளின் அடிப்படையிலே  நடைபெற்றது.விதிமுறைகளின் படியே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக என்னை அப்போதைய ஆளுநர் வித்யாசாகரராவ் நியமனம் செய்தார்.எனவே எந்தவித ஊழலும் என்னுடைய  நியமனத்தில் நடைபெறவில்லை.

Leave a Comment