Cognizant நிறுவனம் மீது புகார்! பாரபட்சத்துடன் நடத்துவதாக காக்னிசன்ட் நிறுவனத்தின் மீது புகார்…..

காக்னிசன்ட் நிறுவனத்தின் மீது அமெரிக்க பணியாளர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாக  புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant Technology Solutions Corporation நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள், அந்நிறுவனத்திற்கு எதிராக சிவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், காக்னிசன்ட் நிறுவனம் தங்களை வலுக்கட்டாயமாக பணியிலிருந்து வெளியேற்றி விட்டு அதே பணியில் தங்களை விடவும் தகுதிக்குறைவானவர்களை பணியமர்த்தியதாக குறை கூறியுள்ளனர். இந்திய அதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே காக்னிசன்ட் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. எச்1 பி விசா தாரர்களை குறைகூறும் நோக்குடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment