தமிழகத்தில் கனமழை! எந்தெந்த இடங்களில் கொட்டி தீர்க்கிறது?

தமிழகத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் அனல் காற்று வீசும், ஒரு சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய் பேட்டையில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும், ஆரணி, சேவூர், குன்னத்தூர், களம்பூர், மலையாம்பட்டினம்,ராட்டினமங்கலம் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடுமையான வெய்யிலிற்கு நடுவே இந்த கோடை கனமழை மக்களை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. DINASUVADU

திருவள்ளுவர் மாவட்டத்தில் புதிய தாலுகா…..பொது மக்கள் மகிழ்ச்சி…!!

தேர்தல் வாக்குறுதி  புதிய தாலுகா  பொது மக்கள் மகிழ்ச்சி  திருவள்ளுவர் மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய தாலுகா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி , ஆவடி உள்ளிட்ட 11 தாலுகாக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளை கொண்டு புதிதாக தாலுகா உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் R.K பேட்டையை  தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா_வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை … Read more

நகைக் கடை பூட்டை உடைத்து திருட்டு…!!

திருவள்ளூர் மாவட்ட கொண்டமாபுரம் தெரு சாந்தி ஜுவல்லர்ஸ் கடையின் முன்பக்கமாக உள்ள இரும்பு கதவின் பூட்டுக்கள் வெல்டிங் மெசின் கொண்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர்  கடை உள்ளே சென்ற போது  35 சவரன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரி: 2-வது நாளாக எரிவாயு நிரப்பும் பணி தீவிரம்…!!

கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து, இரண்டாவது நாளாக குழாய் மூலம் எரிவாயுவை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் அருகில் செல்லாதவாறு தீயணைப்பு துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் … Read more

திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கான நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்…!!

திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 205-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205-ன் விரிவாக்கப்பணி நடைபெற்ற போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிலம் கொடுத்த 400-க்கும் மேற்பட்டவர்கள் 2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு…கடும் நடவடிக்கை…திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் சிறப்பு குறை தீர்க்கும் முகாமை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது குறைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி, அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு … Read more

“அக்கா கணவருடன் தவறான உறவு” கண்டித்த கணவர் கொலை..!!

திருவள்ளூர் ,மாவட்டத்தில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சாகுல் அமீது (70) இவருக்கு மொத்தம் 3 மனைவிகள்.இதில் மூன்றாவது மனைவி ஜபருன்னிஷா (36) இந்நிலையில் இவரின் கணவர் தீடீரென இறந்து விட்டார்.அப்போது இறுதி சடங்குகள் செய்வதற்காக உறவினர்கள் , சொந்தபந்தங்கள் சாகுல் அமீது வீட்டுக்கு ஜபருன்னிஷா விடம் ஆறுதல் சொல்ல வந்தனர். அப்போது சாகுல் அமீது உடம்புகளில் காயங்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசிடம் புகாரளித்தனர்.அப்போது அங்கெ வந்த காவல்துறை அவரின் மனைவி … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…! விடுதி காப்பாளர் உட்பட 4 பேர் கைது …!

திருவள்ளூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தனியார் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளர் பாஸ்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நான்கு பேர் மீது மாணவர்கள் புகாரின் பேரில் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் விடுதியில் நேரில் விசாரித்து, 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் . DINASUVADU

திருவள்ளூர் அருகே குட்கா கடத்திய  கார் ஓட்டுநர் கைது !

திருவள்ளூர் அருகே குட்கா கடத்திய  கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் காரில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஓட்டுநர் மூர்த்தியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதி உடல் நிலை…!திமுக தொண்டர் தற்கொலை. ..!

கருணாநிதி உடல் நிலை குறித்த செய்தியை கேட்டு திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் கங்கன்(60) தற்கொலை செய்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.