4,000 துணை பேராசிரியர்கள் – அரசாணை வெளியீடு!

4,000 கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரி பேராசிரியர்கள் இட மாற்றம் தொடர்பான கலந்தாய்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 4,000 துணை பேராசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி துணை பேராசிரியர்கள் நியமனம் இன்று வெளியிடப்படும். 3,000 காலி பணியிடங்களுக்கு 5,408 பேர் கலந்தாய்வுக்கு … Read more

அரசாணை என் 115ஐ திரும்ப பெறுக.! – எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை. !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ நீக்க வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது, அரசு பணிகளில்,திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் … Read more

நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா… மனமே தருகிறேன்… ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.   பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், கமலஹாசன் அனைவரும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. … Read more

#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!

கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை வரும் 22-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 6 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் அளித்து பூவிருந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் … Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மீண்டும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் இந்தநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை மறுநாள் 10ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மிக … Read more

#BREAKING : 10 % இடஒதுக்கீடு தீர்ப்பு..! முதல்வர் ஆலோசனை..!

10% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 10% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று … Read more

இபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி.! கோவை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை.!

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவை தர்காவில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.  முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவையில் ஒரு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் … Read more

பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை – ஆர்.பி.உதயகுமார்

நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் பருவமழையை மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பருவமழையால் உயிரிழந்த  23 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் … Read more

தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயம் இதுதான் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஓசூர் அருகே தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவு. தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக ‘காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை’ அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவிரி தெற்கு காட்டுயிர்  சரணாலயம்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் உள்ளிடக்கி சரணாலயம் அமைகிறது. ‘காவிரி தெற்கு … Read more

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உயர்ந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி.  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமான ஆணைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 1145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், … Read more