தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயம் இதுதான் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஓசூர் அருகே தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவு.

தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக ‘காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை’ அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவிரி தெற்கு காட்டுயிர்  சரணாலயம்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் உள்ளிடக்கி சரணாலயம் அமைகிறது. ‘காவிரி தெற்கு காட்டுயிர்  சரணாலயம்’ தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாகும். காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது.

தென்னிந்தியாவில் யானைகள் அதிகமாக வசிக்கும் முக்கிய இடங்களில் உள்ளடக்கிய சரணாலயம் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ,தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயமாக ‘காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை’ தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளுடன் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை நமது மாநிலத்தின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் நீண்ட தூரம் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment