ட்விட்டரில் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்திய முன்னணி நிறுவனங்களான ஆடி,ஜெனரல் மில்ஸ்.!

ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமையேற்ற பிறகு சில கம்பனிகள் தங்களது விளமபரங்களை ட்விட்டரில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. ட்விட்டரில் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஸ்க், ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார், மேலும் உலகம் முழுதும் 50% பணியாளர்களை நீக்கினார்.

உள்ளடக்க அளவீடு (Content Moderation)கன்டென்ட் மாடரேஷன், வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க், ட்விட்டரில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சனை காரணம் காட்டி சில முன்னணி நிறுவனங்கள் ட்விட்டரில் தங்களது விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

உணவு நிறுவனமான ஜெனரல் மில்ஸ், ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, ஃபைசர் நிறுவனம், ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் ஆகிய கம்பனிகள் ட்விட்டரில் விளம்பரங்களை நிறுத்தியுள்ளது.

தற்காலிக சூழ்நிலையை பொறுத்து ட்விட்டர், ஒரு பாதுகாப்பான தளமா என்பதை நாம் கூறமுடியாது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்து ட்விட்டரிடம் கேட்ட போது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment