சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்..!

நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த கோடை விடுமுறைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெறுவேன் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், சொந்த மண்ணில் நடக்கும் வங்காள தேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்,  ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட … Read more

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றி வளைத்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் … Read more

#BREAKING : நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு -அமைச்சர் அறிவிப்பு..!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை 48 லட்சம் கடன்களில் 35 லட்சம் கடன் தள்ளுபடி இல்லை என நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் அவை சரிபார்த்து ஆய்வின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி … Read more

புத்தாண்டையொட்டி சென்னையில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு..!

சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை புத்தாண்டையொட்டி ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் … Read more

இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் போதும் இனி கட்டுக்கட்டாக பணம் சேரும்..!

இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அதனை அடைவதற்கு பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பணம் வரவை விட செலவு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறதா? கையில் சேரும் பணம் எப்படி கரைகிறது என்று தெரியாமல் கவலை கொள்கிறீர்களா? இனி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பணம் கையை விட்டு … Read more

56-வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!

56-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும் , டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில், 56-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு துறைகளில் ஏற்கனவே முடிவுற்ற 203 திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும்,  புதிதாக 532 பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதுமட்டுமல்லாமல் 327 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 40,344 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்வில் … Read more

இன்றைய (30.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் :  இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமாக அமையும். உத்தியோக வேலையில் எளிமையாக இலக்கை அடைவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். … Read more

நாளை வெளியாகிறது? வலிமை ட்ரைலர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

வலிமை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் அந்தஸ்து – தலைமை செயலாளர் உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் உத்தரவு. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், … Read more