#Breaking:அதிமுக பொதுக்குழு – இன்று உயர்மட்டக் குழு முக்கிய ஆலோசனை!

அதிமுக பொதுக்குழு வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பணிகளில் ஈபிஎஸ் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே,பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்தார்.அப்போது, பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக இரு தினங்களுக்கு முனர்தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாகவும்,எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க அவசர வழக்காக இதனை எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று நேற்று அதனை விசாரித்த தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,வழக்கை இன்று ஒத்தி வைத்தார்.அதன்படி,இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.அதன்படி,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

 

Leave a Comment