அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது !

மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது அமர்நாத் யாத்திரை. ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 5,982 யாத்ரீகர்கள் குழு இரண்டு கான்வாய் வாகனங்களின் துணையுடன் பள்ளத்தாக்குக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மோசமான வானிலை காரணமாக யாத்திரையில் ஈடுபட்ட “யாத்திரீகர்களில் 3,363 பேர் பஹல்காம் அடிப்படை முகாமுக்கும், 2,619 பேர் பால்டால் அடிப்படை முகாமுக்கும் செல்கின்றனர்” என்று அதிகாரிகள் அறிவித்தனர் .

இந்நிலையில் இன்று(ஜூலை6) காலை வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் பகலில் பால்டால் அடிப்படை முகாமில் இருந்து குகை ஆலயத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 65,000 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர், இந்த யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடைகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment