#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.

உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புடின் கூறியுள்ளார். அங்கு வாழும் அனைத்து உயிர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

அதாவது, தாயகம் திரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும். ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்