#Breaking:மறைமுகத் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.

இதனைத்தொடர்ந்து,மாநகராட்சி மேயர்,துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,மறைமுகத் தேர்தலில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர்நீதிமன்ற கிளையை அணுகலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே,மறைமுகத் தேர்தல் நடவடிக்கை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும்  என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது. மேலும்,மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்கும் திட்டமில்லை எனவும்,உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது.

மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்ககூடாது என தேவகோட்டை அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்திருந்த நிலையில்,தேர்தல் தள்ளிவைப்பு பற்றி அச்சம் கொள்ள காரணம் இல்லை எனக்கூறி இது தொடர்பான வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.