#BREAKING: மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம்- ரஷ்ய ராணுவம் அறிவிப்பு ..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம்  கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய  படைகள் உக்ரைனில்  சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நேற்று போர் நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தது. ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில் பெலாரஸில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

பெலாரஸ்  நாட்டில் உக்ரைன் -ரஷ்யா குழுவினர் இடையே இந்திய நேரப்பப்படி பிற்பகல் 2;30 மணிக்கு தொடங்க உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

 

author avatar
murugan