#Breaking:145 தடை உத்தரவு அமல்;2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் காலை அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.இதனிடையே,இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.மேலும், அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து,சட்டவிரோதமாக கூட்டம் கூடினால் 145 குற்றவியல் நடைமுறைச்சட்ட விதி அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என 145 தடை உத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனை,மீறி கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தால்,கூட்டத்தில் இருப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

145 தடை உத்தரவு என்பது?

பொதுவாக சட்ட விரோதமாகக் கூடியுள்ள கூட்டத்தைக் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவிடும் நிலையில்,அந்த உத்தரவுக்குப் பிறகும் கலையாமல் இருந்தால் அப்பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும்,சட்டவிரோதமான கூட்டத்தில் இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment