#BREAKING: 10% இட ஒதுக்கீடு; அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது! – ஜெயக்குமார்

10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருத்தது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்த நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், அக்கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவித்திருந்தது.

சட்டசபையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளில், இந்த இடஒதுக்கீடு குறித்து, அதிமுக தரப்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை. இந்த நிலையில், 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் என்ற திமுகவின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தான்தோன்றித்தனமாக வாதிட்டு மூக்கறுபட்டு தீர்ப்பு வந்தபின் தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பாஜக தேவையில்லை என்பதால் 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்ப்பதுபோல் திமுக நடிக்கிறது என்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நாளை முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment