மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!

இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் பள்ளியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பத்ம சேஷாஸ்திரி பள்ளிக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவே போலீசார் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.

READ MORE –  தமிழக அரசை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

இந்நிலையில், பலத்த போலீசார் பாதுகாப்புடன் இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. கடந்த வாரம் மின்னஞ்சல் மூலம் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

READ MORE – அதிமுகவில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு பதவி..! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கடந்த மாதம் சென்னையில், கோபாலபுரம், கேகே நகர், பாரிமுனை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. இதனையடுத்து, நிறைய பள்ளிகளில் சோதனை செய்து பார்த்ததில் இது ஒரு புரளி, பெற்றோர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment