பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு.! என்ஐஏ வசம் ஒப்படைப்பு.!

Rameshwaram Cafe – கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமாக செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம், 29-30 வயது கொண்ட ஒரு நபர் ஒரு பையை உணவகத்தில் வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி… 

அந்த நபர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் வெடிக்குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், உணவாக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை முதலில் கர்நாடக போலீசார் 7 குழுக்கள் அமைத்து விசாரணையை தொடங்கினர்.

Read More – குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சித்தராமையா..!

அதன் பின்னர், இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ அதிகாரிகளும் விசாரிக்க தொடங்கினார். இதனை அடுத்து தற்போது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வழக்கை முழுதாக ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்தில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா.? நிழல் உலக தாதா தொடர்பு இருக்கிறதா என்ற பல்வேறு கோணங்களில் வழக்கு விசாரணையை என்ஐஏ தொடர உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment