அதிமுகவில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு பதவி..! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Gayathri Raghuram: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து அக்கட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். அவர் விசிகவில் இணையவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More: இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம்! அதிமுக பற்றி திருமாவளவன் சூசகம்

இதற்கு நன்றி தெரிவித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

Leave a Comment