பிகில் இசைவெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது?! கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.  இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி, நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்து இருந்தார். முக்கியமாக பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்தில் யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்க வில்லை எனவும்,  யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை  உட்கார வையுங்கள் எனவும் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆளும் கட்சியினர் மத்தியில் விமர்சனங்களை உண்டாக்கியது.

தற்போது தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கல்வி நிறுவனங்களில் ஒரு அரசியல் சினிமா சார்ந்த நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம் என கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு கல்லூரி தரப்பில் இருந்து, விழா நடைபெற்ற அந்த ஆடிட்டோரியம் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏற்கனவே அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவும் கல்ல்லூரி நிர்வாகம் தரப்பில் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.