ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை ??

 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்களுடன்  இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் 17 துணைவேந்தர்கள் மற்றும் 18 பல்கலைகழக பதிவாளர்கள், உயர்கல்விதுறை செயலர் கலந்து கொண்டனர்.

பல துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்ம முறைகேட்டில் ஈடுபடும் துணை வேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழகத்துக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அளவுக்கு துணைவேந்தர்கள் பணியாற்ற வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சொத்து விவரங்களை தர வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்  தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment