பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி தொடர்பாக நீரவ் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்சிக்கு பிடிவாரண்ட் !

நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோருக்கு  பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி தொடர்பாக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என இருவரும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினர். இந்நிலையில், அவர்கள் மீதான மோசடி வழக்கில், இருவர் மீதும் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment