ஆசிய கோப்பை 2018: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேசம்…! ஆப்கானிஸ்தான் அணி அபார பந்துவீச்சு …!

வங்கதேச அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது.

இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதன் பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிடி 58 ,ரஷீத் கான் 57 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணியின் பந்துவீச்சில் சாகிப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .இதன் பின்னர் 256 ரன்களை இலக்காக கொண்டு  வங்கதேச அணி களமிறங்கியது.

வங்கதேச அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் முகமதுல்லா 21,ஹுசைன் ரன் ஏதும் அடிக்காமல்  உள்ளார் .

 

Leave a Comment