மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்!!அனைத்து கட்சிகள் கோரிக்கை!!மதுரை ஆட்சியர்

  • தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மதுரையில் ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காவல்துறை பங்கேற்றது.அதில் ,சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம்.சித்திரை திருவிழாவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவத்தை வைத்து தேர்தல் நடத்தலாம் என்று தெரிவித்தது.

அதேபோல் மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Image result for மதுரை ஆட்சியர் நடராஜன்

பின்னர் இது தொடர்பாக  மதுரை ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில்,மதுரையில் தேர்தல் புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் .மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்படும்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல்  19-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.உள்ளூர் விடுமுறை எப்போது என்று மட்டுமே தேர்தல் ஆணையம் கேட்டது, அதற்கு பதிலளித்தோம்.

இந்து சமய அறநிலையத்துறை அளித்த தகவலின் படி ஆணையத்திடம் தெரிவித்தோம். திருவிழா தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்த தகவலை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment