மின் இணைப்பு நிறுத்தப்பட்டதால் 15 நோயாளிகள் வெனிசூலாவில் உயிர் இழந்தனர்!!!

  • வெனிசூலாவில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டதால் வெனிசூலா நாடே இருளில் மூழ்கி கிடந்தது.
  • வெனிசூலாவில் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் “டயாலிசிஸ்” சிகிச்சை பெற முடியாமல் இரண்டு நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்தனர்.

வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது .வெனிசூலா தற்போது  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.மேலும் அதிபர் நிகோலஸ் மதுரோ மீதான சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் வெனிசூலாவில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டதால் வெனிசூலா நாடே இருளில் மூழ்கி கிடந்தது.

இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது என அதிபர் நிகோலஸ் மதுரோ  கூறியுள்ளார்.

வெனிசூலாவில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

முக்கியமாக குழந்தைகள் , முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னலை சந்தித்து வருகிறார்கள்.

வெனிசூலாவில் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் “டயாலிசிஸ்” சிகிச்சை பெற முடியாமல் இரண்டு நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்தனர்.

வெனிசூலாவில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெனிசூலா நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேல் “டயாலிசிஸ்” நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் அவர்கள் உயிர் இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதார உரிமைகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
murugan

Leave a Comment