திமுகவை ஆக்கிரமிக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பம் ..!அவதியில் மு.க.அழகிரி..!புதிதாக அரசியலில் நுழைந்த ஸ்டாலின் வாரிசு ..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியில் பாரப்பட்சம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் குறித்து கூறினார்.அவர் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலின் அரசியலில் நுழையவில்லை.ஏற்கனவே உதயநிதி அரசியலில் தான் இருக்கிறார். ஒருவர் திமுகவில் இருக்கிறார் என்றால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் திமுகவில்தான் இருக்கும். திமுக வரலாற்றை ஆய்வு செய்தால், தாத்தா முதல் பேரன் வரை அனைவரும் திமுகவில்தான் இருப்பார்கள். திமுக என்பது வாழைமரம் போன்றது.வாழையடி வாழையாக திமுக உறுப்பினர்கள் கட்சியில் இருப்பவர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால், ஒரு மகனும், தந்தையும் திமுகவில் இருந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதேபோல் தான் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி நீண்டநாட்களாக போராடி வருகிறார்.ஆனால் ஸ்டாலினோ தன்னுடைய குடும்பத்தினரை மட்டுமே திமுகவில் சேர்த்து வருகிறார்.தற்போது அவரது மகனான உதயநிதியும் அரசியலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இதனால் ஸ்டாலினின் பார்வை ஆளுக்கொரு நீதி என்ற போக்கிலே உள்ளது.திமுக வரலாற்றை ஆய்வு செய்தால், தாத்தா முதல் பேரன் வரை அனைவரும் திமுகவில்தான் இருப்பார்கள் என்று கூறிய அவர் அவரது குடும்பம் என்றால் ஒரு நீதி ,மு.க.அழகிரி குடும்பம் என்றால் ஒரு நீதியாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்.இதனால் மு.க.அழகிரி வேறு குடும்பத்தினரை சார்ந்தவரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.