#Breaking:ஒற்றைத் தலைமை…விடிய விடிய விசாரணை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது.ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை மற்றும் கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு,இதனால் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.பொதுக்குழுவில் எது நடக்கும்,எது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது.அந்த வகையில்,கட்சி சட்ட விதிகளில் திருத்தம் நடக்கலாம்,நடக்காமலும் இருக்கலாம்.பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உறுப்பினர்களின் விருப்பத்தை பொருத்து அறிவிக்கப்படும்.அதனை பெரும்பான்மையே முடிவு செய்யும் என தெரிவித்தார்.

admk ,ops eps

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,கடந்த டிசம்பரில் உட்கட்சி தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.

இதற்கிடையில்,23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது.கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துள்ளார்.இந்த 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.

admk

இதனைத் தொடர்ந்து,இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும்,பொதுவாக கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை எனவும்,பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானம் குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.எனவே,அதில் தலையிட முடியாது என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். குறிப்பாக,23 வரைவு தீர்மானங்கள் குறித்து மட்டுமே ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றும்,புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

admk,OPS

ஒற்றைத் தலைமை தீர்மானத்துக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தடை விதிக்காததை எதிர்த்து,ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை அண்ணா நகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விடிய விடிய விசாரணை நடந்த நிலையில் நீதிபதிகள் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.இதனை,ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனிடையே,பொதுக்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்கள் வருகை புரிந்து வரும் நிலையில்,கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் பங்கேற்பார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.மேலும்,பொதுக்குழு நடைபெறும் மண்டபம் மற்றும் அதனை சுற்றி இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment