Petrol Today: பெட்ரோல்,டீசல் விலை 10 வது நாளாக மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 10-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை … Read more

சற்று முன்…பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்குப் பதிவு!

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும்,இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று பேரணி நடத்தப்பட்டது.அதன்படி,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை … Read more

“அதிர்ச்சி மரணம்;வருத்தமளிக்கிறது” – மநீம தலைவர் கமல்,காங்.எம்பி ராகுல் இரங்கல்!

தமிழில் காக்க காக்க திரைப்படத்தில் (உயிரின் உயிரே),கில்லியில் (அப்படி போடு),அந்நியன் (அண்டங்காக்கா கொண்டக்காரி),7G ரெயின்போ காலனி(நினைத்து நினைத்து) உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார் . அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் … Read more

இன்றைய நாளின் (01.06.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் சகப்பணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இன்று உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் துணையிடம் சில முக்கிய விஷயங்களை பற்றி பேசுவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று நீங்கள் … Read more

#Breaking:உஷார்…மீண்டும் எகிறிய கொரோனா;ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,338 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 2,745 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,60,832 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 19 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,636 … Read more

“30 நாட்கள் தருகிறோம்;மீறினால் 10 லட்சம் பேர்” – மீண்டும் அண்ணாமலை விடுத்த கெடு!

நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது. இதனிடையே,”திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றும்,எனவே,திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.இதனை 72 மணி நேரத்திற்குள் … Read more

#Breaking:குட்நியூஸ்…வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.102.50 உயர்த்தின. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக … Read more

#Breaking:பத்திரப்பதிவு முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பத்திரப்பதிவு செய்வதற்கு அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணத்தை பதிவு செய்ய விரும்புவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அதிக பத்திரப்பதிவு நடைபெறும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை தொடர்பான … Read more

#Alert:50 கிமீ வேகம்;தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் மழை – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,இன்று முதல் நான்கு நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில இடங்களில் … Read more

குரங்கு அம்மை எதிரொலி – தமிழக விமான நிலையங்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,குரங்கு அம்மை பாதிப்புகள் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க … Read more