17வது நாளைத் தொட்ட பெட்ரோல்-டீசல்..விலைநிலவரம் இதோ!

இன்று (ஏப்.,1) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய விலையில் இருந்து சிறிதும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும்,  ஒரு லிட்டர் … Read more

பாடகி கனிகாவுக்கு ஐந்தாவது முறையாக உறுதிசெய்யப்பட்ட கொரோனா!

பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஐந்து முறை சோதனை செய்ததில் ஐந்து முறையும் அவருக்கு அது பாசிட்டிவாக அமைந்துள்ளது. இந்நிலையில், இவருக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை சாம்பிள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. அதுபோல இவர் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

வரலாற்றில் இன்று(01.04.2020)…. உலக முட்டாள்கள் தினம் இன்று….

கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான  நாடுகளில் ஏப்ரல் மாதம்  1ஆம் தேதியை  ஆண்டின் தொடக்க நாளாக கருதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் நாள்காட்டியில்  ஏப்ரல் 1-ந்தேதி தான் ஆண்டின் தொடக்கமாக புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பின்  13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1ஆம் … Read more

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் … Read more

இன்றைய(01.04.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

மேஷம்: ஆலயவழிபாட்டில் ஆர்வம்  அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும் வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.     ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் நிலவிவந்த நெருக்கடி அகலும்.போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.   மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி குடிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்.    கடகம்: பயணங்கள் மூலம் கிடைக்கும் நாள். கடைசி நேரத்தில் பணத் தேவைகள் பூர்த்தி … Read more