11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க வழக்கு:சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள அனைவரும் அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதேபோல் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பின்னர் பன்னீர்செல்வம் ஒரு அணியாக பிரிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

இதை தொடர்ந்து  துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி  உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடந்தார்.அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும்  சபாநாயகர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில்தர உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர், எம்எல்ஏக்கள் 11 பேரும் வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment