36 பந்தில் 102 ரன்கள்.. சாதனை மேல் சாதனை படைத்த ருதுராஜ்..!

ந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மேக்ஸ்வெல் 48 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் என மொத்தம் 104* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலியா வெற்றி பெறச்செய்தார். இரு அணிகளும் இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி  57 பந்தில் 123* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும். முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து 36 பந்தில் 102 ரன்கள் குவித்தார். இந்திய வீரர் ருதுராஜ்  சதம் விளாசியதன் மூலம்  சாதனை மேல் சாதனைகளை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின்  இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன் சுப்மன் கில் 126* ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச டி20 யில் கடைசி மூன்று ஓவர்களில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசி மூன்று ஓவரில் ருதுராஜ்  52 ரன்கள் அடித்தார். அதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த ஒன்பதாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

author avatar
murugan