ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் எடுக்க கூடாது…பசுமை தீர்ப்பாயம் அதிரடி…!!

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வணிக நோக்கத்திற்க்காக தன்னீர் எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் சட்டவிரோதமாக வணிக நிறுவனங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஜோயல் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து வணிக ரீதியாக , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்க தடை அனுமதி இல்லை.மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக் கொள்ளலாம் என்று  பசுமை உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பின் மூலமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் பகுதி  கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை-யாக இருந்து வந்த இந்த கோரிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment