ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும்…! இஸ்ரோ தலைவர் சிவன்

ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன்  கூறுகையில், பிஎஸ்எல்வி சி-43 மூலம் செலுத்தப்பட்ட ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும்.2019-ம் ஆண்டில் 12 முதல் 14 ராக்கெட்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.8 நாடுகளின் செயற்கைக்கோள்களை கொண்டு சென்றதன் மூலம் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் தயாரிப்பதற்கான பாதி தொகை வசூலிக்கப்பட்டது.தற்போது 47 செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் செயல்பட்டு வருகிறது என்றும்  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment