வெடித்தது ஆட்சி அமைக்கும் சண்டை! கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்..!

 

கோவாவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டம்.தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்.

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜ.க. 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முக்கிய வேட்பாளரான முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால்எதிர்பாரத விதமாக  கூட்டணியை ஏற்படுத்தி தற்போது கோவாவில் பா ஜ க ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க  உரிமை கோரியுள்ளது.இது தொடர்பாக கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் நாளை அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment