'ரூ 7,400,00,00,000' வெறும் 5 நாட்கள் 'காத்திருக்கும் ஆஃபர்கள்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஃபெஸ்டிவல் ஆஃபர் சேல் மூலம் இந்தியாவில் ஸ்மார்ட்போனின்ன விற்பனையானது அடுத்த 5 நாட்களில் ஒரு பில்லியன் டாலரை (தோராயமாக ரூ.7,400 கோடி) தாண்டும் என கவுண்டர் பாய்ண்ட் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த அக்டோபர் மாதமானது ஸ்மார்ட்போனின் விற்பனை அளவில் சாதனை படைக்க உள்ளது. மேலும், இதுவரையில்லாத வகையில், ஆன்லைன் நிறுவனங்களின் பங்குகளானது 42 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பாக ஆன்லைன் ஸ்மார்ட்போன் சந்தையில் 90 சதவீத பங்குகளை இரண்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.
இந்த ஆண்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், ஆன்லைன் நிறுவனங்களின் பங்களிப்பானது 36 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலே வேறெங்கும் இல்லாத வகையில் ஃபெஸ்டிவல் சேலில் 42 சதவீதத்தை எட்டுவது இதுவே முதன்முறை என கவுண்டர் பாய்ண்ட் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் தருண் பதாக் தெரிவித்துள்ளார்.

இதில் மொத்த ஆன்லைன் சந்தையில், பாதிக்கும் மேலான இடத்தில் ஜியோமி நிறுவனமே முதன்மை வகுக்கிறது. எனினும் இந்த முறை ஜியோமி நிறுவனத்திற்கு போட்டியாக ரியல்மி, ஹானர், அசூஸ், நோக்கியா எச்எம்டி உள்ளிட்ட பிராண்டுகளும் இடம்பெறுகின்றன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆன்லைன் விற்பனையில் சாம்சங் நிறுவனமும் தனது பிராண்டில் சிறந்து விற்பனையான இரண்டு மாடல்களை அறிவித்துள்ளது. அதில் ரூ.62,500 விலையில் விற்பனையான கேலக்ஸி s9 போனை ரூ.42,990 க்கு அமேசானில் விற்பனை செய்கிறது.
இந்தமுறை மொத்த ஆன்லைன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பானது மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment