ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறி..!!

ராஜஸ்தானில் 22 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புடன் அறிகுறியுடன் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 86 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவைப் போன்று காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஏற்படுதல் ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். முதன் முதலில் கடந்த 2017-ம் ஆண்டின்போது அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இங்கு 22 பேர் ஜிகா தாக்குதல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர். அவர் சமீபத்தில் பீகாரின் சிவானுக்கு சென்றுவிட்டு ராஜஸ்தான் திரும்பியுள்ளார்.
இதனால், பீகாரில் இருந்து ஜிகா வைரஸ் ராஜஸ்தானுக்கு பரவி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பீகாரிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு, சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜிகா தாக்குதல் அறிகுறியுடன் காணப்படும் 22 பேரும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment