மிரட்டிய மெர்சல்….மீண்டும் கூட்டணியோடு தெறிக்க…மெர்சலாக்க வரும் தளபதி63…!!!தெறி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சி கட் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.`சர்கார்’ மக்களிடமிருந்து ஆதரவு பெற்று வசூல் ரீதியாக அசுர வேட்டை நடத்தியது.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை விஜய் ரசிகர்கள் பகிர்ந்தும்,வீட்டில் உள்ள இலவச பொருட்களை கொழுந்தியும் வந்தது அரசியவாதிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இது படு வைரலாக பரவியது.என்ன விஜய் நாட்ல அதுவும் அவரோட படத்துல சர்ச்சை வாயே திறக்கல என்று கேள்வி கேட்டவருக்கெல்லாம் கேட்கை வெட்டி பதிலளித்தார் விஜய் இது ரசிகர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.இந்நிலையில் அரசியலை ஒரு ஆட்டு ஆட்டி எடுத்த படம் என்றால் சர்கார்.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

விஜய்க்கு சர்வதேச விருதை பெற்றுதந்த படமான மெர்சல் இந்த படம் விஜய்க்கு பலமான பலத்தை கொடுத்தது.படம் மாபெரும் பெரிய ஹிட் கொடுத்தது.இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் விஜய் மூன்றாவதாக களமிரங்குகிறார் என உறுதியான  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for மெர்சல்

படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்ட செலவில் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனத் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது.

Image result for மெர்சல்

படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் படமாகத் தயாராக இருக்கிறதாம் நடிகர் விஜய்யின் 63 வது படத்திற்கு, மிரட்டிய மெர்சல் படத்தில் வசனம் எழுதிய ரமணகிரிவாசன் தான் இந்த படத்திற்கு எழுதுகிறாராம்.

Related image

படத்திற்கு மெர்சல் ஒளிப்பதிவு செய்தவரான ஜி.கே விஷ்ணு செய்கிறார். படத்தொகுப்பை  ரூபன் மேற்கொள்கிறார்.இந்த கூட்டணி மெர்சல் கூட்டணி மறுபடியும் கை கோர்த்து மிரட்ட வருகிறது.

படத்திற்கான பூஜை விழா இன்று நடந்து.படப்பிடிப்பு பற்றிய தகவல் நடிகை உள்ளிட்டவை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.ரசிகர்களுக்கு இந்த தகவல் தாங்க முடியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது #vijay63 என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களிலும் படு ட்ரெண்டாகி வருகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment