பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் …!புதிதாக தொடங்கவும் ஆதார் கட்டாயம் …! உயர்நீதிமன்றத்தி மனு

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Image result for high court chennai
ஆதார் எண்  இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.இதை மொபைல் எண்,பான் எண்,சிலிண்டர் இணைப்பிற்கு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் ஆதார் தொடர்பாக பல கேள்விகள் இந்தியாவில் எழுந்தது.பாதுகாப்பான ஒன்றா ஆதார்,தனி நபரின் ரகசியம் திருடப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
Related image
பின்னர் அது ஒருவழியாக ஓய்ந்துவிட்டது.மேலும்  இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில்  பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் பங்குமதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றது.
அதேபோல் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்துக்கு,பேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை தேர்தல் ஆதாயத்துக்கு துஷ்பிரயோகம் செய்வது குறித்து  பதில் அளிக்கும்படி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
Related image
இந்த விவகாரம் ஒருபுறம் சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்கவும், கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU

Leave a Comment