பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.அதேபோல் ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தேர்தல் அறிக்கையில் கூறிய குமாரசாமியின் பதவியேற்பில் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்பாரா? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும் என்று கூறினார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
இன்றைய பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…