பாஜக -திமுக கூட்டணி …!பல கட்ட முயற்சிகளை செய்யும் திமுக …!மக்களவை துணை சபாநாயகர் பகீர் தகவல்

தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டுவரமுடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.

Image result for விஜயபாஸ்கர்

இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்ற நாள் முதலே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திமுக மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் கரூர் பள்ளப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டுவரமுடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டுகிறது .மேலும் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது என்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment