நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்!ஆவேசமாக பேசிய அமித் ஷா

இன்று  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,தமிழகத்தில் நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி செய்தனர். 2019 மார்ச்சுக்குள் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என எதிர்ப்பாளர்கள் பார்ப்பீர்கள் .70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக”என்று  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு.தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்.வாரிசு அரசியல், ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது பாஜக ஆட்சி.தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போல வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment