தோளோடு தோள் கொடுப்பேன் பிரதமர் நரேந்திர மோடி…!!

கொஹிமா,
நாகாலாந்து மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, நாடு முழுவதும் சில வாரங்களின் சில நாட்களில் பெய்துள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கேரளாவை தொடர்ந்து நாகாலாந்திலும் கன  மழை பொய்த்து மழை  காரணமாக வெள்ளம் , நிலச்சரிவு மலைப்பகுதியில் அதிகமான பாதிப்பும் ஏற்பட்டது.
இம்மழை காரணமாக அம்மாநிலத்தில்  12 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாயிலாக கூறியிருப்பதாவது ;

நாகலாந்தில் பெய்து வரும் கனமழை பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment