தொண்டர்களால் அதிர்ந்து போன அறிவாலயம்…!ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி…!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் வந்தார்.பின்னர் அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.
 

Leave a Comment