தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி கோரி ஜிதேந்திரா சிங்-கிற்கு ஸ்டாலின் கடிதம்!

குரூப் ‘பி’ – குரூப் ‘சி’ – குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான போட்டித் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் பாரபட்சமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆயிரக்கணக்கில் தேர்வாவதாகவும், 2016-ல் 111 தமிழக மாணவர்களே ஒருங்கிணைந்த பட்டதாரிஅளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மத்திய துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய பின், வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பணிமாறுதலில் செல்வதால் பல பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வடமாநிலப் போட்டியாளர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதுவது போல், தமிழக மாணவர்களும் அவர்கள் தாய்மொழியாம் தமிழில் தேர்வெழுதும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது, “அரசின் வேலைவாய்ப்பில் அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு  தினசுவடுடன்   இணைந்திருங்கள் ….

Leave a Comment