தென்மேற்கு பருவமழையின் முதல் தாக்குதலிலேயே ஆடிப்போன மும்பை!

மும்பை மாநகரம் தென்மேற்கு பருவமழையின் முதல் தாக்குதலிலேயே திக்குமுக்காடி போய் உள்ளது. அந்த மாநகரை மதிய வாக்கில் முற்றுகையிட்ட மழை மேகங்கள், நீண்ட கால பிரிவை தணிக்கும் வகையில் இடைவிடாது மழையை பொழிந்து தள்ளின. மழையோடு கை கோர்த்த காற்று, மாநகரில் நேர் நின்ற மரங்களை நிலம் வீழ்த்த, போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

மும்பையின் மலாபார் மலை வட்டாரத்தில் சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் தத்தளித்தன. இதே போல ஹிண்டுமாலா உள்ளிட்ட பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி மக்களை தடுமாற வைத்தது.

மும்பையை போலவே தானேவும், பருவமழையின் முதல் வருகையால் திக்குமுக்காடி போனது. அடுத்த 24 மணி நேரத்தில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment