தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சிபிஐ விசாரணை ..!தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது  என்று  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில்  இது தொடர்பாக வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.பின்னர் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ் மீது குற்றச்சாட்டு உள்ளதால், இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கூடாது? என்று கேள்வி எழுப்பியது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை மீதே குற்றச்சாட்டு உள்ள நிலையில், வழக்கை ஏன் சிபிஐ க்கு மாற்றக்கூடாது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை  ஒத்திவைத்தது தலைமை நீதிபதி அமர்வு

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment