திமுகவின் தொண்டர்கள் அனைவரும் என்பக்கம் …!விரைவில் கட்சி குறித்து அறிவிப்பேன் ..!மு.க.அழகிரி அதிரடி

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
Image result for alagiri karunanidhi
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி மறைவிற்கு பின்  திமுக செயற்குழு கூட்டம்:
கடந்த  ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14ஆம் தேதி (அதாவது நாளை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் .மேலும் தலைமை  செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது  திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
Image result for stalin alagiri
தற்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திமுகவில்  தலைவர் பதவி காலியாக உள்ள சூழலில், அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ள செயல் தலைவர் ஸ்டாலினே தலைவராவார் என்றே சொல்லப்படுகிறது.
Image result for stalin alagiri
அதே நேரத்தில் மு.க. அழகிரி கருணாநிதி மறைவைத் தொடர்ந்து சாந்தமாகக் காட்சி அளிக்கும் அவருக்கு கட்சியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் முன் வைத்துள்ளனர். அதுபற்றி விவாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளரின் அறிவிப்பே போதுமானது என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.
கருணாநிதியின்  சமாதிக்கு இரவு பகல் பாராமல் பலவேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் அவரது தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Leave a Comment