உலகளவில் விசுவாசம்…இரண்டு ஹாஸ்டக்..அனல்பறக்கும் ட்ரெண்ட்…!!

தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
இப்படம் கிராமத்து பின்னணியில் தல இரண்டு விதமான வேடங்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதன் இரண்டாம் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சர்க்கார் சர்க்கார் என சினிமா செய்திகளில் பேசப்பட்டதை முறியடிக்கும் வகையில் இரண்டாம் லுக் போஸ்டர் இணையத்திலும் டிவீட்டரிலும் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனால் தல அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். (,)இந்த இரண்டு உலகளவில் விசுவாசம் படம்குறித்து இரண்டு ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment