இப்படியும் ஒரு மனிதர்களா?தனியாக இளம்பெண்ணை விட்டுச் செல்ல மனமின்றி காத்திருந்த அரசு பேருந்து ஓட்டுனர்,நடத்துனர்!

இரவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் கேரள மாநிலத்தில்  தனியாக இறங்கிய இளம்பெண்ணை தனியாக விட்டுசெல்ல மனமின்றி காத்திருந்த அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த ஞாயிறு அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று  திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் (41) என்பவர் டிரைவராகவும், ஷைய்ஜூ (40) என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர்.
Image result for In a heart-warming gesture, the driver and conductor of an interstate Kerala S
இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஆதிரா என்ற இளம்பெண் ஒருவர் இறங்க வேண்டிய கொல்லம் அருகே உள்ள சங்கரமங்கலம் பேருந்து நிறுத்தத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பேருந்து வந்தது. அப்போது அங்கு நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. இதனால் தனியாக அந்த பெண்ணை இறக்கிவிட்டு செல்ல மனமில்லாமல் அவரது உறவினர் வரும் வரை அப்பேருந்தின் டிரைவரும், கண்டக்டரும் காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சகோதரர் வந்த பின்னரே பேருந்து அந்த இடத்தை விட்டு சென்றது. இதுகுறித்து அந்த பெண் பேஸ்புக்கில் பதிவு செய்து, அந்த கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment