வெறும் 6 கோடியை மட்டும் அதிமுக அரசு செலவு செய்தது ஏன்? மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர்

By venu | Published: Dec 06, 2019 07:58 AM

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.கோவை மற்றும் துடியலூரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் ஆண்டி சிறுவள்ளூரில் இளம்பெண்ணின் மர்ம மரணமும் தாய்மார்களைப் பெரும் பீதியடைய வைத்துள்ளது! ரூ.190 கோடி நிர்பயா நிதியில் வெறும் 6 கோடியை மட்டும் அதிமுக அரசு செலவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவற்றை சுட்டிக்காட்டினால், “ஸ்டாலின் அரசியல் செய்கிறார்” என்று விதண்டாவாதமாக முதலமைச்சர் கூறுவார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக அரசின் தவறுகளை - ஊழல்களை- மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருப்பேன்! அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc